என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


22 ஜன., 2016

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஓர் மாபெரும் முயற்சி

அறிவியல்
ஆன்மீகம்
ஜோதிடம்
பிரபஞ்சம்
ஆழ்மனம்
மரணம்
உளவியல்
கடவுள்
சித்தர்கள்
நோக்குவர்மம்

போன்ற பல தலைப்புகளில் உள்ள அறிவியல் உண்மைகளை வெளிபடுத்த உள்ளோம். இணைந்திருங்கள் ஒரு மாபெரும் இரகசியம் வெளிப்பட உள்ளது.

Page link www.facebook.com/ragasiyaM123www.facebook.com/ragasiyaM123

7 ஜன., 2016

விதியை மாற்றமுடியுமா?

விதியை மாற்றமுடியுமா?


அறிவியல் தளம்

ஒன்றும் இல்லாத சூன்யத்தில் இருந்து தோன்றி ஒன்றும் இல்லாத சூன்யத்திற்கே செல்வதுதான் பிரபஞ்ச நியதி.


இவ்வாறே நம் முதல் பிறவி எடுக்கும்போது எந்தவித எண்ண பதிவுகளும் இல்லாமல் வெற்று மனதுடன்தான் பிறக்கிறோம். பிறகு நாம் உணரும் அனைத்தும் எண்ண பதிவுகளாக மாறி பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே சிதறி இருந்தாலும் அந்த பதிவுகள் ஒன்றோடொன்று தொடர்பிலேயே உள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை இங்கே கூற போகிறேன்.அதாவது நாம் கற்றவை அனைத்தும் நம் மூளையில் பதிவதில்லை. 

அது பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. அதைதான் நாம் மனம் என்று கூறுகிறோம். மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் அளவிற்கு விரிந்து கிடக்கிறது. பஞ்ச பூதங்களின் கலவையான உடல் அழிந்த பிறகு அந்த எண்ண பதிவுகள் மீண்டும் வேறொரு உடலை எடுத்து நிறைவேறாத(pending) விஷயங்களை பூர்த்தி செய்துகொள்கிறது. 

எப்படி என்றால் நம் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யாருக்கு பிறந்தால் நம் ஆசைகள்(நல்லவையோ கெட்டவையோ) நிறைவேறுமோ அப்படி பிறக்க வைப்பது நம் எண்ணங்களின் வேலை. 

அதன் பிறகு அதை செயல்பட வைப்பது உடு மண்டல கோள்களின் வேலை. இவை அனைத்தும் பிரபஞ்ச கணக்கின்படி மிக துல்லியமாக நடக்கிறது. கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம் உடல் அணுக்களின் அதிர்வுகளை மாற்றி அது உணர்வுகளை மாற்றி நம் எண்ணங்களை மாற்றுகிறது. எண்ணங்களானது அதற்கு ஒத்த விஷயங்களை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. 

ஆக நம் எண்ணங்களின் தீவிரத்தை அதிகபடுத்தி தேவையான விஷயங்களில் கவனத்தை குவிக்கும்போது கோள்களின் காந்த அலைகளால் நமக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

இவ்வாறு நாம் ஆசைபட்ட அனைத்தும் அனுபவித்து தீர்ந்தபின் நம் பிறப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆன்மீக தளம்

கடவுள் மனிதனை படைத்தது மற்ற உயிர்களை பாதுகாக்கவே. ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக பல உயிர்களுக்கு தீங்கிழைக்கிறான். இந்த கர்ம வினைகளை அவன் ஒவ்வோர் பிறவியிலும் கண்டிப்பாக தீர்தே ஆக வேண்டும்.

மாறாக நாம் மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டே போனால் பிறவி பெருங்கடலை நாம் என்றுமே கடக்க முடியாது.

தூராதி தூரமடி தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ பாழ்வினை தீரவென்றால்

பீனியல் கிளான்ட் எனும் சுழிமுனை நாடியில் மனம் லயிக்கும் போது நம் வினைகள் அழிக்கபடுகிறது. மேலும் ஆழமாக பயணிப்போம் தொடரும் 

நன்றி..........

உங்கள் பிரசாத்

11 டிச., 2015

இரகசியம் புலப்படும் குழுவின் 2 வது சந்திப்பு அறிவிப்பு

 🌹அனைவருக்கும் வணக்கம்🌹

வருகிற டிசம்பர் 13/12/2015 அன்று சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

கூட்டத்தில் ஜோதிடம் மருத்துவம் வர்மம் தியானம் யோகா ESP பிராணாயாமம் சரகலை வாசியோகம் ஆவிகள் ஆல்பா மைண்ட் பவர்  ஆகியவை குறித்து விவாதிக்கப்பதோடு சில பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும் இந்த துறைகளில் உள்ள வல்லவர்களும் வர உள்ளனர். இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் இன்றைக்குள் எனக்கு தனியே செய்தி அனுப்பவும்.

முதல் சந்திப்புக்கு வந்த அத்துணை பேரும் வரவுள்ளனர். வர இருப்பவர்களுக்கு புதிய குழு உள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

எனக்கு தகவல் வந்தவுடன் உங்களை அதில் இணைப்பேன். சென்னையில் எங்கு என்பது அந்த குழுவில் அறிவிக்கப்படும்.

    ஆவி உலக ஆராய்ச்சியாளர் ரமணி

     வர்மக்கலை தென்னரசு

     வாசியோகம் சண்முகம்

     சோதிடம் சபரி ஐயங்கார்

      மருத்துவம் சிவராமன்

இன்னும் பலதுறை வல்லுனர்கள் பங்கெடுக்க உள்ளனர்🙏

கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே கண்ட whatsupp எண்ணிற்கு உடன் தகவல் அனுப்பவும்....

நல்லதே நடக்கும்....

பிரசாத் அவர்கள் 97913 05715
ஷண்முகம் 9590766607

5 டிச., 2015

சந்திப்பு தள்ளிவைப்பு

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

சென்னையில் நாளை 6ம் தேதி நமது குழுவின் இரண்டாவது மீட்டிங் மழை வெள்ளம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது...

எப்போது என்று நாளைக்குள் அறிவிக்கப்படும்.

சென்னை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.

நல்லதே நடக்கும்....

2 டிச., 2015

நான்தான் கடவுளா?


நான்தான் கடவுளா?



அறிவியல் தளம்


நான் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றுமில்லாத சூன்யத்தில் ஆழ்ந்த உறக்கநிலையில் இருந்தேன். பின் குவாட்ரிக் ஆற்றலாக மெல்ல மெல்ல விட்டு விட்டு அதிர தொடங்கினேன். 

எனது அந்த மெல்லிய ஆற்றலின் அதிர்வு ஓம் என்று இருந்த்து. அதனால் மின்புலமாகவும் காந்தபுலமாகவும் மாறினேன். பிறகு மின்காந்த அலைகளாக வெளிப்பட்டேன். அலைகளாகிய நான் அணுக்களானேன். பின் பல கோடி அணுக்களாக பிரிந்தேன். 

ஆனால் அனைத்தும் நான்தான். 

பல கோடி அணுக்களாகிய நான் பல நுண் மாற்றங்களை உணர்ந்தேன். அவை அனைத்தும் என் மனதில் பதிந்தது. அந்த அறிவை பயன்படுத்தி புதுப்புது தனிமங்களாக மாறினேன். 

அடுத்து தனிமங்களில் ஏற்பட்ட மாறுதல்களும் என் மனதில் பதிந்த்து. இதனால் என் அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டது. அதை பயன்படுத்தி பஞ்ச பூதங்களாக மாறினேன். 

இன்னும் என் அறிவு மேம்படவே பஞ்ச பூதங்களாகிய நான் மிருகங்களாக மாறினேன். இன்னும் இன்னும் நிறைய அறிந்த நான் மனித உடலாக மாறினேன். இப்போது எனக்கு 13.7 பில்லியன் ஆண்டுகளாக நடந்த அனைத்தும் தெரியும். 

என் எண்ணங்கள் அனைத்தும் என் பல கோடி அணுக்களில் பதிந்துள்ளது. நான் மனிதனாக மாறிய பிறகு புதிய அனுபவங்களை பெற தொடங்கினேன். அந்த அனுபவங்கள் புதிதாகவும் பிடித்த மாதிரியும் இருந்ததால் அதிலேயே உழலுகிறேன். 

என் மனது அந்த அனுபவங்களையே மீண்டும் மீண்டும் கேட்பதால் நான் பழசை முற்றிலுமாக மறந்து மாயையில் சிக்கி கொண்டுவிட்டேன். 

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் என் பழைய நிலையை அடைந்துவிட்டால் மீண்டும் என்னை(பிரபஞ்சத்தை) கட்டுபடித்திவிடுவேன்.

ஆன்மீக தளம்

பிரம்மத்தில் மோன நிலையில் இருந்த என்னை ஓம் என்ற அதிர்வு உசிப்பிவிட்டது. பின் ஆற்றலாகி அணுக்களாகி அனைத்துமாகி உள்ளேன். நான்தான் மொத்த பிரபஞ்சம். மனிதர்கள் அனைவரும் என் சிறு பகுதிதான். நீயே நான். நானே நீ.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும்மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

{சிவவாக்கியர்}

மேலும் பயணிப்போம் இணைந்திருங்கள். 

உங்கள் பிரசாத் 

நன்றி.

பேய்கள் ஜாக்கிரதை



பேய்கள் ஜாக்கிரதை


அறிவியல் தளம்

நாம வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது. 

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது. ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது. 

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது. ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது. நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. 

அதேபோல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது. 

பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது. 

ஒளி உடல் இருக்கும் வரை எண்ணபதிவின் தொடர்பு இருக்கும்.


ஆன்மீக தளம்


தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான். ஆவியை அடிக்கடி நினைத்து பயம்கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டுவிடுகிறது. 

பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது. உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது. வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டுவருகிறது. 

அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது. அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது. ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும். 
சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும். ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டுபிடிக்கும் காலம் விரைவில் வரலாம்.

மேலும் பயணிப்போம் இணைந்திருங்கள். 

உங்கள் பிரசாத்

நன்றி..........

1 டிச., 2015

குண்டலினி என்றால்?


குண்டலினி என்றால்?


அறிவியல் தளம்

நம் அனைவரின் உடலிலும் உள்ள அணுக்களில் மின்காந்த சக்தி உள்ளது. 72000 நாடிகளும் 7 ஆதார சக்கரங்களில் பிணைக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் இங்கிருந்துதான் சக்தி கிடைக்கிறது. 

ஆனாலும் 7ல் சக்தி கிடங்காக செயல்படுவது மூலாதாரம் மட்டுமே. காரணம் ஈர்ப்பு விசையினால் அந்த சக்தி அங்கே உறைந்துள்ளது. நாம் சுவாசிக்கும் போது உட்கொள்ளும் மின்காந்த சக்தி மூலாதாரதிற்கு சென்று சேமிக்கபடுகிறது. நம் உடலுக்கென்று எந்த தனி நோக்கும் கிடையாது. 

அதை எப்படி பாவிக்கிறோமோ அப்படியே ஆகிவிடும். மனதை மேல்நோக்கி(இறை அல்லது சூரியன்) செலுத்தும்போது நம் உடலில் உறைந்திருக்கும் அந்த ஆற்றல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு மேலேறுகிறது. 

அதாவது புவியின் விடுபடு திசைவேகமான 11200km/sec வேகத்தையும் மீறி பீனியல் கிளான்ட் நோக்கி பயணிக்கிறது. அவ்வாறு பயணிக்கும்போது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதீத சக்தி பாய்வதால் நாம் இனம்புரியாத கிளர்ச்சி நிலையை அடைகிறோம்.

ஆன்மீக தளம்


குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று. மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள். குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. 

குண்டலினி சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. 

மேலும் எண்ணற்ற தலைப்புகளின் உண்மையை அறிவோம்

பிரசாத்

நன்றி.