என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


2 டிச., 2015

பேய்கள் ஜாக்கிரதை



பேய்கள் ஜாக்கிரதை


அறிவியல் தளம்

நாம வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது. 

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது. ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது. 

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது. ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது. நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. 

அதேபோல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது. 

பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது. 

ஒளி உடல் இருக்கும் வரை எண்ணபதிவின் தொடர்பு இருக்கும்.


ஆன்மீக தளம்


தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான். ஆவியை அடிக்கடி நினைத்து பயம்கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டுவிடுகிறது. 

பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது. உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது. வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டுவருகிறது. 

அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது. அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது. ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும். 
சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும். ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டுபிடிக்கும் காலம் விரைவில் வரலாம்.

மேலும் பயணிப்போம் இணைந்திருங்கள். 

உங்கள் பிரசாத்

நன்றி..........

1 டிச., 2015

குண்டலினி என்றால்?


குண்டலினி என்றால்?


அறிவியல் தளம்

நம் அனைவரின் உடலிலும் உள்ள அணுக்களில் மின்காந்த சக்தி உள்ளது. 72000 நாடிகளும் 7 ஆதார சக்கரங்களில் பிணைக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் இங்கிருந்துதான் சக்தி கிடைக்கிறது. 

ஆனாலும் 7ல் சக்தி கிடங்காக செயல்படுவது மூலாதாரம் மட்டுமே. காரணம் ஈர்ப்பு விசையினால் அந்த சக்தி அங்கே உறைந்துள்ளது. நாம் சுவாசிக்கும் போது உட்கொள்ளும் மின்காந்த சக்தி மூலாதாரதிற்கு சென்று சேமிக்கபடுகிறது. நம் உடலுக்கென்று எந்த தனி நோக்கும் கிடையாது. 

அதை எப்படி பாவிக்கிறோமோ அப்படியே ஆகிவிடும். மனதை மேல்நோக்கி(இறை அல்லது சூரியன்) செலுத்தும்போது நம் உடலில் உறைந்திருக்கும் அந்த ஆற்றல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு மேலேறுகிறது. 

அதாவது புவியின் விடுபடு திசைவேகமான 11200km/sec வேகத்தையும் மீறி பீனியல் கிளான்ட் நோக்கி பயணிக்கிறது. அவ்வாறு பயணிக்கும்போது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதீத சக்தி பாய்வதால் நாம் இனம்புரியாத கிளர்ச்சி நிலையை அடைகிறோம்.

ஆன்மீக தளம்


குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று. மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள். குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. 

குண்டலினி சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. 

மேலும் எண்ணற்ற தலைப்புகளின் உண்மையை அறிவோம்

பிரசாத்

நன்றி.


முன்ஜென்மம் மறுபிறவி


அறிவியல் தளம்


முதன்முதலில் வெற்று மனதுடன் பிறந்த நாம் பிறகு ஜம்புலன்களாலும் சேகரிக்கப்படும் எண்ணங்களால் மனதை நிரப்புகிறோம். நாம் தீவிரமாக எண்ணும் அனைத்தும் பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. அவை ஒன்றோடொன்று தொடர்பிலேயே இருக்கும். அதைதான் நாம் ஆழ்மனம் என்று கூறுகிறோம். 

மேலோட்டமாக சிந்திக்கும் எவையும் அதில் பதிவதில்லை. அந்த எண்ண பதிவுகள்தான் நாம் என்ற அடையாளம். அவை பிரபஞ்சம் இருக்கும்வரை இருக்கும். நாம் ஆழ்மனத்தில் பதிய வைத்த அந்த எண்ணங்களே வாழ்கையில் அனுபவமாகிறது. 

அவை நல்லவையோ மாறானவையோ அதை அனுபவிக்குமவரை நாம் பிறவியை தொடர்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் புதுப்புது உலக வாசனைகளில் கவனம் குவியும்போது அது அடுத்தடுத்த பிறவிக்கு வழி செய்கிறது. அதுவும் குழுவோடு சேர்ந்தே மறுபிறப்பு எடுக்கிறோம். 

அதாவது நமக்கு பரிட்சயபட்ட மக்களுடனேயே மீண்டும் பிறக்கிறோம். இந்த பிறவியில் எனக்கு தந்தையாக இருப்பவர் அடுத்த பிறவியில் நணபராகவோ அண்ணனாகவோ மகனாகவோ எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம். நான் இப்போது அவரை எப்படி பாவிக்கிறேனோ அப்படி. 

இந்த பிறவியில் உங்கள் சுற்றுவட்டத்தில் உள்ளவர்கள் சில பேர்மீது ஏற்படும் ஈர்ப்புக்கு காரணம் அவர்கடந்த பிறவியில் உங்கள் நெருங்கிய உறவாகக்கூட இருக்கலாம். ஆக பிறவி முடிய வேண்டுமானால் இதுவரை பல பிறவிகளில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள எண்ணங்களின் தொடர்பில் இருந்து விடுபட வேண்டும்.

ஆன்மீக தளம்

பரப்பிரம்மத்தின் பிம்பமாக பிறப்பெடுத்த நாம் உலக மாயைகளில் சிக்கி கர்ம வினைகளை சேர்த்து மறுபிறவிக்கு வித்திடுகிறோம். தூய ஆத்மா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை சுமந்து கொண்டு மறுபிறப்பெடுகிறது. நாம் செய்யும் பாவம் இரும்பு விலங்கிட்டு நம்மை மறுபிறவிக்கு கூட்டி செல்லும். 

நாம் செய்யும் புண்ணியம் பொன் விலங்கிட்டு மறுபிறவிக்கு அழைத்து செல்லும். உலக பற்று நீங்கும் வரை நமது பிறப்பு தொடர்கதைதான். வினை விதைத்தவன் நிச்சயம் அதை அறுத்தே தீருவான். 

இதை முன்பே நமக்கு கடவுள் கூறி அனுப்பி இருந்தால் அன்பை மட்டுமே வாழ்கை ஆக்கி இருப்போம். உலகபற்றுதலில் இருந்து எப்பொழுது மனம் விடுபடுகிறதோ அதுவே நமக்கு கடைசியாகி நமது இந்த அற்புதமான பிறப்பு ஓரு முடிவுக்கு வருகிறது. 

அடுத்த பதிவில் மீண்டும் பயணிப்போம். 

கருத்துக்களை பதியவும். 

உங்கள் பிரசாத் 

நன்றி

30 நவ., 2015

சூரியனை சாப்பிடலாமா?



சூரியனை சாப்பிடலாமா?


அறிவியல் தளம்

வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்பட்டு மின்புலத்தை உருவாக்கியது. மின்புலம் அசைந்து காந்தபுலத்தை உருவாக்கியது. இவை இரண்டும் சேர்ந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது. 

இந்த அலைகள் மூன்றுவித துகள்களை உருவாக்கியது. அவை புரோட்டான் நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான். இவை இணைந்து அணுக்களானது. அணுக்கள் பல்வேறு விதத்தில் பிணைந்து தனிமங்கள் ஆனது. தனிமங்கள் மூலக்கூறுகள் ஆனது. மூலகூறுகள் சேர்ந்து நாம் உண்ணும் உணவுகளை உருவாக்கியது. 

இவை எல்லாம் உருவானது மின்காந்த சக்தியில் இருந்துதான் என்பது தெளிவாகிறது. மின்காந்த அலைகள்தான் ஒளி. எனவே சூரியனை நாம் உற்று நோக்கி அந்த சக்தியை கிரகிக்க முடியும்.

ஆன்மீக தளம்

நமது ஆத்ம காரகனான சூரிய பகவானை தினமும் உதயத்தின் போதும் மறைவின் போதும் கண்சிமிட்டாமல் உற்று நோக்கி நமஸ்காரம் செய்து அவரின் சக்தியை நாம் கிரகிக்க முடியும். 

அவ்வாறு செய்வதால் நாம் உண்ணும் உணவின் மூலம் நமக்கு கிடைக்கும் தாதுப்பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கிரகிக்க முடியும். சூரிய நமஸ்காரம் என்பது இதுவே. 

இதை தொடர்ந்து செய்யும்போது நாளாக நாளாக நாம் உணவை குறைத்து ஒருகட்டத்தில் உணவே இல்லாமல் நம்மால் உயிர்வாழக்கூடிய நிலையை அடைய முடியும். 

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன நமது சித்தர்களின் வலிமை எப்பேர்பட்டது. 

கருத்தகளை எதிர்பார்க்கும் 

உங்கள் பிரசாத் 

நன்றி.

நோக்குவர்மம் சாத்தியமா?



நோக்குவர்மம் சாத்தியமா?


அறிவியல் தளம்

நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திலும் மின்காந்த சக்தி உண்டு. அந்த சக்தி குறையும் போது உடலில் எந்த பகுதி பலவீனமாக உள்ளதோ அந்த பகுதியில் இருக்கும் இணைப்பு இயக்க சங்கிளிகளின் கன்னிகளை தெரிக்க வைக்கிறது. அதன் மூலம் உடலில் நோய் ஊடுருவுகிறது. 

முதுகுதண்டின் கீழ்பகுதிதான் நம் உடலின் சக்தி மையமாக செயல்படுகிறது. இங்கிருந்துதான் உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் சக்தி பாய்கிறது. புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த சக்தி முதுகுதண்டின் அடியிலேயே உறைந்துள்ளது. 

நோக்குவர்மம் என்பது அந்த சக்தியை கண்களுக்கு ஏற்றி அதன் வழியாக எதிராலியின் உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் எதிலேனும் குவித்து பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியும்.


ஆன்மீக தளம்

நமது உடலில் 6000 கோடி செல்கள் 72000 நாடிகளால் பிணைக்கபட்டுள்ளது. அந்த நாடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடங்களே 108 வர்ம புள்ளிகள் ஆகும். இந்த வர்ம புள்ளிகள் 7 ஆதார சக்கரங்களில் இணைக்கபட்டுள்ளது. 

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகியவையே அந்த சக்கரங்கள். மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை கண்களுக்கு ஏற்றி எதிராலியின் பிராண சக்தியை உறிஞ்சி மயக்கத்தையோ அல்லது மரணத்தையோ நிகழ்த்துவே நோக்குவர்மம்.

நாம் சுவாசிக்கும் போது பிரபஞ்ச சக்தியான பிராண சக்தியையும் சேர்த்துதான் உட்கொள்கிறோம். இதை பிராணாயாம்ம் எனும் மூச்சு பயிற்சியால் சக்தியை அதிகமாக்கி கொள்ளலாம். 

நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றவனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று அகஸதியர் கூறுகிறார். எனவேதான் இது சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே சொல்லபட்டுள்ளது. அடுத்து ஒரு வித்தியாசமான தலைப்பின் அறிவியலை ஆழமாக அலசுவோம்.

தங்கள் கருத்துக்களே எனது ஊக்கமருந்து 

நன்றி 

உங்கள் பிரசாத்

29 நவ., 2015

விதியை மாற்றமுடியுமா?

விதியை மாற்றமுடியுமா?


அறிவியல் தளம்

ஒன்றும் இல்லாத சூன்யத்தில் இருந்து தோன்றி ஒன்றும் இல்லாத சூன்யத்திற்கே செல்வதுதான் பிரபஞ்ச நியதி.


இவ்வாறே நம் முதல் பிறவி எடுக்கும்போது எந்தவித எண்ண பதிவுகளும் இல்லாமல் வெற்று மனதுடன்தான் பிறக்கிறோம். பிறகு நாம் உணரும் அனைத்தும் எண்ண பதிவுகளாக மாறி பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே சிதறி இருந்தாலும் அந்த பதிவுகள் ஒன்றோடொன்று தொடர்பிலேயே உள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை இங்கே கூற போகிறேன்.அதாவது நாம் கற்றவை அனைத்தும் நம் மூளையில் பதிவதில்லை. 

அது பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. அதைதான் நாம் மனம் என்று கூறுகிறோம். மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் அளவிற்கு விரிந்து கிடக்கிறது. பஞ்ச பூதங்களின் கலவையான உடல் அழிந்த பிறகு அந்த எண்ண பதிவுகள் மீண்டும் வேறொரு உடலை எடுத்து நிறைவேறாத(pending) விஷயங்களை பூர்த்தி செய்துகொள்கிறது. 

எப்படி என்றால் நம் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யாருக்கு பிறந்தால் நம் ஆசைகள்(நல்லவையோ கெட்டவையோ) நிறைவேறுமோ அப்படி பிறக்க வைப்பது நம் எண்ணங்களின் வேலை. 

அதன் பிறகு அதை செயல்பட வைப்பது உடு மண்டல கோள்களின் வேலை. இவை அனைத்தும் பிரபஞ்ச கணக்கின்படி மிக துல்லியமாக நடக்கிறது. கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம் உடல் அணுக்களின் அதிர்வுகளை மாற்றி அது உணர்வுகளை மாற்றி நம் எண்ணங்களை மாற்றுகிறது. எண்ணங்களானது அதற்கு ஒத்த விஷயங்களை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. 

ஆக நம் எண்ணங்களின் தீவிரத்தை அதிகபடுத்தி தேவையான விஷயங்களில் கவனத்தை குவிக்கும்போது கோள்களின் காந்த அலைகளால் நமக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

இவ்வாறு நாம் ஆசைபட்ட அனைத்தும் அனுபவித்து தீர்ந்தபின் நம் பிறப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆன்மீக தளம்

கடவுள் மனிதனை படைத்தது மற்ற உயிர்களை பாதுகாக்கவே. ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக பல உயிர்களுக்கு தீங்கிழைக்கிறான். இந்த கர்ம வினைகளை அவன் ஒவ்வோர் பிறவியிலும் கண்டிப்பாக தீர்தே ஆக வேண்டும்.

மாறாக நாம் மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டே போனால் பிறவி பெருங்கடலை நாம் என்றுமே கடக்க முடியாது.

தூராதி தூரமடி தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ பாழ்வினை தீரவென்றால்

பீனியல் கிளான்ட் எனும் சுழிமுனை நாடியில் மனம் லயிக்கும் போது நம் வினைகள் அழிக்கபடுகிறது. மேலும் ஆழமாக பயணிப்போம் தொடரும் 

நன்றி..........

உங்கள் பிரசாத்

சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம்

🌹அனைவருக்கும் வணக்கம்🌹

இரகசியம் புலப்படும் குழுவின்  இரண்டாம் சந்திப்பு கூட்டம் சென்னையில்

வருகிற டிசம்பர் 06 ஞாயிறு அன்று சென்னையில் இரண்டாம் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

கூட்டத்தில் ஜோதிடம் மருத்துவம் வர்மம் தியானம் யோகா ESP வாசியோகம் சரகலை ஆவிகள் ஆகியவை குறித்து விவாதம் மற்றும் சில பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் கீழே  உள்ள எண்ணில் என்னை தொடர்புக் கொள்ளவும்.

முதல் சந்திப்புக்கு வந்த அத்துணை பேரும் வரவுள்ளனர். சென்னையில் எங்கு என்பது தனியே அறிவிக்கப்படும்.

பிரசாத்

தொடர்பு எண்: +91 7401211591
& Whatssup

நல்லதே நடக்கும்

வாழ்க வளமுடன்🙏