என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


17 மார்., 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்

அகத்திய மகரிஷி சித்தர் மார்க்கத்தில் பேரொளி நிலையினை பெற விரும்பும் சாதகன் அறிய வேண்டிய அடிப்படை ஞானத்தை முப்பது பாடல்களில் பரிபாஷையாக சுருக்கி தந்ததை அனைவரும் விளங்கும் படி எளிமையாக விளக்கவுரையாக திறந்து கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.

இந்த பண்புகளை எப்படி பெறுவது?

இதற்கு விடை கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்
பன்னிரண்டு வருட குரு குல வாசம் ஏன் கட்டாயம் என்று சித்தர், ரிஷி பரம்பரையில் கூறப்பட்டதன் விளக்கம் என்ன?

விடைகூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.


சித்தர்களின் பரிபாஷை என்பது மறைப்பாக கூறப்பட்ட குழுக்குறி என்று பொதுவாக வியாக்கியானம் செய்யபட்டு வருகிறது,

இவற்றை எல்லோரும் விளங்கி கொள்ள முடியுமா?

என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலுடன் எப்படி என்ற விளக்கத்தையும் தருகிறது, அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

பரி, வாசி, வாலை என்ற மூன்று சொற்களும் சித்தர் வழியில் முன்னேற விரும்பும் மாணவன் அறியவேண்டிய இரகசியங்கள்.

இதனை திறந்து விளக்கம் கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

ஒருவன் தனது ஆன்மீக பயணத்தில் குருவின் துணை அவசியம். இதனை எப்படி பெறுவது?

தனது முன்னேற்றம் தடைப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை அனுபவ அறிவுரையாக கூறும் நூல் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல்.

-----------

அகத்தியர் யோக ஞானத்திறவு கோல் நூலில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் : பகுதி - I

1. மெஞ்ஞான குருவின் தன்மை
வித்தை தரும் சத்குருவின் தன்மை

2. யோக சாதகனுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

3. பன்னிரண்டு ஆண்டுகள் குருவை அண்டி யோக

4. சாதனை பயில்வதற்கான அவசியம்

5. ஓரெழுத்து மந்திரமும் அதன் சிறப்புகளும்

6. பரி, வாசி, வாலை ஆகியவற்றின் யோக விளக்கம்

7. குருபத தியானத்தின் அவசியம்

8. யோகத்தில் அடைய வேண்டிய நிலைகள்

9. ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கம்

10. பிரணாயாமம் பழகுவதற்கு அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டியவை

11. பிராண வலிமையின் பயன்

12. வகார மாறலின் விளக்கம்

13. வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் சாதகன் அறியவேண்டியவை எவை?

14. வாமபூசை இரகசியம்

15. மனமும் அதன் திரிபுகளும்

16. மனதிற்கும் சூரிய சந்திரர்களுக்குமான தொடர்பு

17. எண்ணம் உதிக்கும் மற்றும் மறையும் இடங்கள்

18. வாசிப் பிரணாயாமம்

19. வாலை என்பதன் விளக்கம்

20. பிரணாயாம சூத்திரம்

21. பிரணாயாம பயிற்சிக்கு குருவின் அவசியம்

22. பிராணனை தச நாடிகளில் தாரணை செய்தல்

23. நாடி தாரணை மந்திரங்கள்

24. மந்திர வித்தெழுத்துக்களின் முடிவின் “ம்”, “ங்” விகுதிகள் சேர்ப்பதற்கான காரணம்

25. சித்தர்கள் கூறும் மௌனம்

26. மனிதனை முக்கோணமாக உருவகித்தால் அதன் கூறுகள்

27. நாடி தாரணையின் அனுபவம்

28. பஞ்சபூத உறைநிலை தளம்

29. பஞ்ச பூத ஒடுக்க நிலை தளம்

30. வாசி - சிவ யோகத்தின் சாரம்

31. நிறங்களுக்கும் சூக்கும சக்கரங்களுக்குமான தொடர்பு

32. குருவின் பாத கமல தியானத்தின் அவசியம்

33. சிவயோகியின் அமிர்தம்

34. மூன்று மண்டலங்கள்

35. விபரீத கரணி முத்திரைகளின் விளக்கம்

36. பஞ்சாக்ஷரத்தின் பொருள்

37. பஞ்சாக்ஷர அடைமொழிகளான ஸ்தூல, சூக்ஷ்ம,

38. அதி சூக்ஷ்ம, காரண, மகாகாரண ஆகியவற்றின் பொருள்

39. அமிர்தம் சுவீகரிக்கும் முறைகள்

40. போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை ஸ்தூல

41. உடல் சுக்கிலத்திற்கும் சூக்ஷ்ம உடல் விந்திற்குமான தொடர்பு

இன்னும் பல அடங்கி உள்ளன.

தன்னை அறிய விரும்பும் ஒருவருக்கு கேள்விகள் அனைத்திற்கும் இதில் விடைகள் உள்ளது

இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்ரீ காயத்ரி சாதனை வகுப்பினை இலங்கையில் இருந்து நடத்தி வரும் திரு சுமனன் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தியான சாதனை செய்ய விரும்பும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

மேற்படி புத்தகம் வேண்டுவோர் நமது யாஷி பவுண்டேசன் மூன்றாவது சந்திப்பில் நேரில் வாங்கி  கொள்ளலாம்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்கள் சந்திப்பு முடிந்ததும் கூரியர் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

இப்புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் கழிவு தொகை யாஷி பவுண்டேசன் சேவை பணிகளுக்கு உபயோகப் படுத்த படும்

புத்தக பதிப்பக விலை Rs.270 மட்டுமே.

கூரியர் மற்றும் பேக்கிங் சார்ஜ் extra as actual.

வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கப் படும். அதற்க்கான உண்மையான கூரியர் செலவுகள் தனி.

இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது அடியேனுக்கு 9590766607 என்ற Whatssup எண்ணில் தனி செய்தியாக வரும் ஞாயிற்று கிழமைக்குள் பதிவு செயது விடுங்கள்.

நேரில் வருபவர்கள் நேரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

கூரியரில் பெற வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டியதைவே தனி செய்தியாக தகவல் தெரிவிக்க படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக