என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


6 நவ., 2015

கடவுள் என்றால் யார்? அல்லது எது?

கடவுள் என்றால் யார் அல்லது எது?


அறிவியல் தளம்

பிரபஞ்சத்தின் அங்கமான நாம் ஒரு மாபெரும் சக்தியுடன் இணைந்துதான் செயல்படுகிறோம். அந்த சக்தியின் வெளிப்பாடே ஆற்றல். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. 

அது எப்போதோ இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். ஒளியை தவிர இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒளி சார்பியல் விதிகளுக்கு அப்பார்பட்டது. 

அது ஒரு தனிமுதற்பொருள். கடவுள் ஒளி வடிவமானவர். ஒளியே கடவுள். 

கடவுள்(ஒளி) மணிக்கு சுமார் 1,80,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிப்பார். அதை எந்த சக்தியாலும் நெருங்க முடியாது. மீறி முயன்றால் அது பொருளாகவே இருக்காது கரைந்துவிடும். காலமும் இடமும் பிரபஞ்சத்திற்கு உட்பட்டது. அதற்கு வெளியே காலமோ இடமோ கிடையாது.

ஆன்மீக தளம்

பிரம்மத்தில் இருந்து வந்ததே பிரபஞ்சம். பரமாத்மா(அல்லா, தேவன், சிவன்) உலகத்தை சிருஷ்டித்தார். அவர்க்கு ஆக்கமோ அழிவோ கிடையாது. 

அது எப்போதோ இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். 

பரமாத்மா ஒளி வடிவமானவர். புற உலகத்திற்கு புலபடாத சூட்சமமானவர். மனிதன் கடவுளின் பிம்பம். அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். 

அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள் என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. 

காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.

பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. 

எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம்.

அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டத்திற்கு நம் உணர்வு நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.


நன்றி..................

உங்கள் பிரசாத்

12 கருத்துகள்:

  1. உங்கள் கருத்துக்களை இங்கே இடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்து ஆனால் படிக்க படிக்க எல்லாமே குழப்பமாக உள்ளதே

    பதிலளிநீக்கு
  3. Universe is bigger than the distance that light could have traveled since the big bang. That means the god has not seen himself many parts of the universe yet.

    பதிலளிநீக்கு