என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


29 நவ., 2015

ஜோதிடம் உண்மையா?

ஜோதிடம் உண்மையா?


அறிவியல் தளம்

பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியும், பூமியை சார்ந்த உயிர்களும் அந்த அதிர்வுகலால் பாதிக்கபடுகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் கண்ணுக்கு தெரியாத காந்த அலைகள் நம் உடலில் உள்ள அணுக்களின் காந்த அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது நம் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நம் எண்ணங்களை மாற்றுகிறது. 

ஒத்தவற்றை ஒத்தவையே கவர்ந்திழுக்கும் என்ற ஈர்ப்பு விதி செயல்பட்டு நம் எண்ணங்கள் அதற்கு ஒத்த விஷயங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வருகிறது. குவாண்டம் தியரியின் கண்டுபிடிப்பு "மனது என்பது இல்லையென்றால் பிரபஞ்சம் என்பது சாத்தியம் இல்லை" என்பதை சுட்டிகாட்டுகிறது. 

எனவே நாம் எதை உண்ர்கிறோமோ அது நம் மனதால் வடிவமைக்கப்படுகிறது. அதுவே நம் வாழ்க்கையில் வருகிறது.
ஆன்மீக தளம்

நாம் முதன்முதலில் தூய ஆத்மாவில் இருந்து பிறப்பெடுத்து பல்வேறு உலக மாயைகளில் சிக்கி பாவ புண்ணியங்களை சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். கர்மாவிற்கு ஏற்றாற்போல் நவ கிரகங்களும் நம்மை வழி நடத்துகின்றன. 

நாம் பல்வேறு பிறவிகளை எடுத்து பாவ புண்ணியங்களை தீர்த்து கடைசியில் பிரம்மத்திற்கே சென்றுவிடுகிறோம்.

"உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி
விழிப்பது போலாம் பிறப்பு"

இறப்பு என்பது நாம் என்ற நம் ஆவி நிலைக்கு ஓய்வு கொடுப்பதாகும். மீண்டும் பிறப்பெடுக்கும் வரை நாம் சக்தி பெருகிறோம். கடவுளால் கட்சிதமாக கணக்கு போடப்பட்டு நம் வாழ்க்கை வழிநடத்தபடுகிறது. 

மேலும் ஆழமாக பயணிப்போம்.

பிரசாத்

1 கருத்து: