என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


29 நவ., 2015

விதியை மாற்றமுடியுமா?

விதியை மாற்றமுடியுமா?


அறிவியல் தளம்

ஒன்றும் இல்லாத சூன்யத்தில் இருந்து தோன்றி ஒன்றும் இல்லாத சூன்யத்திற்கே செல்வதுதான் பிரபஞ்ச நியதி.


இவ்வாறே நம் முதல் பிறவி எடுக்கும்போது எந்தவித எண்ண பதிவுகளும் இல்லாமல் வெற்று மனதுடன்தான் பிறக்கிறோம். பிறகு நாம் உணரும் அனைத்தும் எண்ண பதிவுகளாக மாறி பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. பிரபஞ்சத்தில் ஆங்காங்கே சிதறி இருந்தாலும் அந்த பதிவுகள் ஒன்றோடொன்று தொடர்பிலேயே உள்ளது. இதுவரை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை இங்கே கூற போகிறேன்.அதாவது நாம் கற்றவை அனைத்தும் நம் மூளையில் பதிவதில்லை. 

அது பிரபஞ்ச அணுக்களில் பதிகிறது. அதைதான் நாம் மனம் என்று கூறுகிறோம். மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் அளவிற்கு விரிந்து கிடக்கிறது. பஞ்ச பூதங்களின் கலவையான உடல் அழிந்த பிறகு அந்த எண்ண பதிவுகள் மீண்டும் வேறொரு உடலை எடுத்து நிறைவேறாத(pending) விஷயங்களை பூர்த்தி செய்துகொள்கிறது. 

எப்படி என்றால் நம் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் எந்த நேரத்தில் எந்த இடத்தில் யாருக்கு பிறந்தால் நம் ஆசைகள்(நல்லவையோ கெட்டவையோ) நிறைவேறுமோ அப்படி பிறக்க வைப்பது நம் எண்ணங்களின் வேலை. 

அதன் பிறகு அதை செயல்பட வைப்பது உடு மண்டல கோள்களின் வேலை. இவை அனைத்தும் பிரபஞ்ச கணக்கின்படி மிக துல்லியமாக நடக்கிறது. கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம் உடல் அணுக்களின் அதிர்வுகளை மாற்றி அது உணர்வுகளை மாற்றி நம் எண்ணங்களை மாற்றுகிறது. எண்ணங்களானது அதற்கு ஒத்த விஷயங்களை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. 

ஆக நம் எண்ணங்களின் தீவிரத்தை அதிகபடுத்தி தேவையான விஷயங்களில் கவனத்தை குவிக்கும்போது கோள்களின் காந்த அலைகளால் நமக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. 

இவ்வாறு நாம் ஆசைபட்ட அனைத்தும் அனுபவித்து தீர்ந்தபின் நம் பிறப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

ஆன்மீக தளம்

கடவுள் மனிதனை படைத்தது மற்ற உயிர்களை பாதுகாக்கவே. ஆனால் மனிதன் தன் சுயநலத்திற்காக பல உயிர்களுக்கு தீங்கிழைக்கிறான். இந்த கர்ம வினைகளை அவன் ஒவ்வோர் பிறவியிலும் கண்டிப்பாக தீர்தே ஆக வேண்டும்.

மாறாக நாம் மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டே போனால் பிறவி பெருங்கடலை நாம் என்றுமே கடக்க முடியாது.

தூராதி தூரமடி தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ பாழ்வினை தீரவென்றால்

பீனியல் கிளான்ட் எனும் சுழிமுனை நாடியில் மனம் லயிக்கும் போது நம் வினைகள் அழிக்கபடுகிறது. மேலும் ஆழமாக பயணிப்போம் தொடரும் 

நன்றி..........

உங்கள் பிரசாத்

1 கருத்து:

  1. அடடே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த பதிவுகள் அருமையா இருக்கிறதே ..ம்ம் தொடருங்கள் தொடர்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு