என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


4 நவ., 2015

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?


அறிவியல் தளம்


வெற்றிடத்தில் குவான்டம் ஆற்றல் செயல்படும் என்கிறது அறிவியல். அப்படி குவான்டம் ஆற்றல் செயல்பட்டதால் மின்புலம் உருவானது. மின்புலத்தை அசைக்கும்போது காந்தபுலமும், காந்தபுலத்தை அசைக்கும்போது மின்புலமும் உருவாகும். மின்புலமும் காந்தபுலமும் இணைந்து மின்காந்த அலைகளை உருவாக்கியது. மின்காந்த அலைகளின் மாறுபட்ட தன்மையால் மூன்றுவித துகள்கள் உருவானது. அவை முறையே எலக்ட்ரான், நியூட்ரான் மற்றும் புரோட்டான்.

இந்த மூன்றுவித துகள்களும் இணைந்து தான் அணு. நியூட்ரானும் புரோட்டானும் மையத்தில் பிணைந்து அதை எலக்ட்ரான் சுற்றி வருவதே அணுவாகும். அணுக்கள் மூலக்கூறுகளாகி, மூலக்கூறுகள் தனிமங்களாகி, தனிமங்கள் பொருட்களாகி உருவானதுதான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். ஆக ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம். ஒரே ஒரு அணு அதிக அழுத்ததிற்கு உள்ளாகி பிரமாண்ட வெடிப்புடன் சீறி எழுந்த்துதான் பிரபஞ்சம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆன்மீக தளம்


சூன்யத்தில் லயித்து இருந்தது பிரணவ மந்திரமான ஓம் என்ற ஒலி மட்டுமே. அந்த ஒலியில் மனமொன்றி உறங்கிக்கொண்டிருந்த சிவபெருமானை அன்னை சக்தி எழுப்பிதால் கோபம் கொண்ட சிவன் அதிக ஆக்ரோஷத்துடன் சீறி எழிந்ததால் உருவானதே இன்றைய பிரபஞ்சம். அதை கண்ட அன்னை சக்தி பிரபஞ்சம் முழுக்க வெளிப்பட தொடங்கினாள்.

சிவனால் உருவான பிரபஞ்சம் முழுக்க சக்தியின் வெளிப்பாடே. பிரபஞ்ச பொருட்கள் அனைத்திலும் இந்த எல்லையில்லாத சக்தி பொதிந்து கிடக்கிறது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது. மேலும் ஆழமாக பயணிப்போம் 

நன்றி..................

உங்கள் பிரசாத்

7 கருத்துகள்:

 1. நல்ல விளக்கம் ஆனால் இன்னும் தேவைப்படும்

  பதிலளிநீக்கு
 2. நல்ல விளக்கம் ஆனால் இன்னும் தேவைப்படும்

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து வரும் ஐயா, நன்றி

  நல்லதே நடக்கும்

  பதிலளிநீக்கு
 4. தொடர்ந்து வரும் ஐயா, நன்றி

  நல்லதே நடக்கும்

  பதிலளிநீக்கு
 5. தொடர்ந்து வரும் ஐயா, நன்றி

  நல்லதே நடக்கும்

  பதிலளிநீக்கு
 6. தொடர்ந்து வரும் ஐயா, நன்றி

  நல்லதே நடக்கும்

  பதிலளிநீக்கு